பிரியந்த குமார தியவடனவை நினைவு கூறும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை மறுதினம் (10) விசேட கண்டன தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கொலையுடன் சம்பந்தப்பட்ட 140 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 34 பேர் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடாதிபதி வீரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.