நுவரெலியாவில் இன்று கடும் பனிப்பொழிவு!

Date:

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும், வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக மலையக மரக்கறிச் செய்கை மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...