நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி சில்வா அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கான நியமனக் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே புதிய தலைவருக்கு இன்று (01) காலை வழங்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.