பதுளை சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் | மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையின் விசேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்கள்மீது சக கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றவர்கள்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த நால்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் மூவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுமார் 9பேர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்களுக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாகவும் உடனடியாக இவர்களை வேறு பாதுகாப் பான சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அவர்களது குடும்பத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் எனக் கூறியே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தடிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஒருவரின் தாடை எலும்புகள் மற்றும் பல் என்பன சேதமடைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிறைர்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீரகேசரி

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...