அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய நடைமுறை எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மேற்கண்டவாறு அமைந்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)