பாகிஸ்தானின் அரசுக்கல்லூரி எதிரே நேற்றிரவு ஜமியத் உலமா இஸ்லாம் கட்சியின் மாணவர் பிரிவினர் நடத்திய பொதுக்கூட்டத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள அரசு கல்லூரியின் மைதான நுழைவுவாயில் அருகே இருந்த கம்பத்தின் அடியில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கலைந்து செல்ல தொடங்கிய சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது .
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.