பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந் நிலையில் மேற்கு கரை பகுதியில் 154 கிராம பிரிவு அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இத் தேர்தலில் மொத்தம் 4 இலட்சம் வாக்காளர்கள் வாக்கு உரிமையை பெற்றிருந்தனர்.பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.