பிரியந்த குமாரவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உச்சபட்ச தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்- புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவினரின் ஊடக மாநாட்டில் தெரிவிப்பு!

Date:

இலங்கை கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த பிரியந்த குமார, பாகிஸ்தானில் கொடூரமக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள், பக்கச்சார்பின்றி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை கண்டித்து புத்தளம் மாவட்ட சர்வ செயற்குழு இன்று (07) புத்தளம் பாலாவியில் நடத்திய விஷேட ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழு இணைத் தலைவர்களான புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கட சுந்தரராமக் குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பங்குத் தந்தை அருட்திரு பயஸ் கெனடி பெனாந்து அடிகளார், புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த உதுவாதன குசல தம்ம ஹிமி, புத்தளம் மாவட்ட திருச் சபையைச் சேர்ந்த அருட்பணி ரட்ண மலர் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.எஸ்.அப்துல் முஜீப் மௌலவி , முஹம்மது முஸம்மில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சர்வ மத தலைவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் பொறியியலாளராக பிரியந்த குமார கடந்த 11 வருடங்களுக்கும் மேல், பாகிஸ்தானில் நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

இந் நிலையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற தகராறு காரணமாக அவர் கடுமையாக தாக்கப்பட்டு, தீமூட்டி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை எந்த மதங்களும், மனித நேயங்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்றாகும்.

எனவே, இந்த சம்பவத்தை புரிந்தவர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் அனைவருக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அத்துடன், மனித சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்ற வகையில், தொழில் நிமித்தம் பாகிஸ்தானில் பணியாற்றி வரும் இலங்கை பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதுடன், சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமரிடமும், அதிகாரிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதுவர் ஊடாக அந்நாட்டு அரசுக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைக்கவுள்ளோம்.

அத்துடன், கணவனை பிரிந்த மனைவிக்கும், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கும் புத்தளம் மாவட்ட சர்வ மத செயற்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...