தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் ‘ராய்’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி கடந்த வியாழக்கிழமை தாக்கியுள்ளது. இதில் தினாகட் உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.சூறாவளியில் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 146 ஆக இருந்த நிலையில், 375 ஆக திங்கட்கிழமை அதிகரித்தது. 500 போ் காயமடைந்துள்ளனா். மாயமான 56 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
சூறாவளியின் பாதிப்பால் பல நகரங்கள், கிராமங்களை அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.