இன்று (28) புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று (27) கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் கொண்டு செல்வது மற்றும் சீமெந்து கொண்டு செல்லும் செயற்பாடுகளிலிருந்து விலகுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.