தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மேலும் மூன்று வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 Kg (கிலோகிராம்) எடைப் பிரிவில் பங்குகொண்ட இந்திக திஸாநாயக்க, ஸ்னெட்ச் முறையில் 130kg கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 156kg கிலோ எடையையும் என மொத்தமாக 286kg கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
மேலும், குறித்த போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், மலேஷியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
இதனிடையே, ஆண்களுக்கான 67kg கிலோ கிராம் எடைப் பிரிவில் மதுவன்த விஜேசிங்க 254kg கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 113kg கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 141kg கிலோ எடையையும் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான 61kg கிலோ கிராம் எடைப் பிரவில் பங்குகொண்ட நதீஷானி ராஜபக்ஷ வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.இதன்படி, இலங்கை இதுவரை ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
முன்னதாக பெண்களுக்கான 45kg கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கம் வெல்ல, ஆண்களுக்கான 61kg கிலோ கிராம் எடைப் பிரிவில் திலங்க பலகசிங்ஹ வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி the papare