மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல்!

Date:

வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL) இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வங்கி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...