சட்டவிரோதமாக யானைக் குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதி யாக கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கமகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நீதவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யாதவர மற்றும் வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
உரிமம் இல்லாமல் யானைக் குட்டியை வைத்திருந்தது, போலி ஆவணங்களை டெண்டர் செய்ய சதி செய்தது, போலி ஆவணம் தயாரித்து சம்பந்தப்பட்ட யானைக் குட்டியை பதிவு செய்தது உள்ளிட்ட 25 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் நீதவான் திலின கமகே 2016 ஆம் ஆண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.