தெரிவு செய்யப்பட்ட பிரதான மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய அபுஜா/ நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் , பிராங்பேர்ட்/ ஜேர்மனியிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம், நிக்கோசியா/ சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மூடப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.