ரஷ்யா மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்றுகூடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Date:

ரஷ்யா பல்கலைக்கழகத்தினால் ( Udmurt State University of Russia ) ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி Izhevsk Federal Model United Nations அமைப்பின் நிகழ்வொன்று கடந்த 31.11.2021 திகதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது நேரடியாகவும் மற்றும் zoom தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தககது.

இந் நிகழ்வில் இலங்கையை பிரநிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய இளைஞர் பாராளுமன்ற பிரதமர் பெதும் ரனசிங்க மற்றும் இளைஞர்கள் பாராளுமன்ற வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதியமைச்சர் அஹ்மத் சாதிக் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் ” கொவிட் 19 நோய்த்தொற்றும் மனித உரிமைகளும் “ அதாவது கொவிட் 19 பரவல் காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டது. மேலும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பயன்படுத்திய உத்திகள் தொடர்பாகவும் அவதானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...