வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை!

Date:

வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய நிலைவை கொடுப்பனவை வழங்கி மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ,தாபன சட்ட விதிகளின் படி அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் , அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான முஹம்மத் ஷாஃபி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.எனினும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...