இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இராணுவத்தினரினால் உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்க போர்வை, கம்பளி , தீயை அணைக்க தண்ணீர் என குறித்த மக்கள் உதவினர்.குறித்த கிராம மக்களுக்கு இராணுவம் மற்றும் விமானப் படையினர் ,அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ்களையும் அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உதவிகளையும் வழங்கி வைத்தார்கள்.