2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் என டைம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பெருமைக்குரியதாக கருதப்படும் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க், நியூராலிங், கிரிப்டோகரண்சி முதலீடு என தான் தடம் பதித்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வரும் எலான் மஸ்கை 2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.