இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் தெய்வீக கிராம நிகழ்வு புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக மேற்படி தேவஸ்தானத்தின் பிரதம மதகுரு தெரிவித்துள்ளார்.