2022 வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.வரவு – செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதில் 20 வது சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டின் வரவு -செலவு திட்டத்திற்கும் வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், ஹாரிஸ், தெளபீக், பைசல் காசிம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷரப் ஆகியோர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த் குமார் ஆதரவாக வாக்களித்துள்ளார்.