ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது என்றும் தற்போது அது 57 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் டெல்டா வைரசின் பாதிப்பை விடவும் குறைவான பாதிப்புதான் ஒமிக்ரானால் ஏற்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.