நேற்று (24) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களையும் கொழும்பு ஆங்கிலிகன் பிஷப் துஷ்யந்த ரொட்ரிகோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் குருநாகல் ஆங்கிலிகன் பிஷப் கீர்த்திஸிரி பெர்நான்டோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் சந்தித்தனர்.
இதன்போது நபி ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிறப்பை முன்வைத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள செய்தி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.