அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை (21) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று குறித்த சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இதனையடுத்து நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.