Update: இந்திய பாதுகாப்பு தலைமை அதிகாரி உட்பட 13 பேர் விபத்தில் உயிரிழப்பு; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

Date:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என 14 பேர் சென்ற ஹெலிகொப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபின் ராவத் சென்ற போது இன்று பிற்பகல் 12.27 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ரிகேடியர் விடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், இராணுவ வீரர்கள் நாயக் குருசேவாக் சிங், நாயக் ஜிதேந்திரா குமார் ஆகியோரும் பயணித்தனர். நஞ்சப்புரா சத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது.

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை பார்த்து அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகொப்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்து, விபத்தில் சிக்கியவர்கள் மீட்க முயன்றனர். விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

பிபின் ராவத் பயணமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணி குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியாளரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிந்து கொண்டார்.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 13 பேர் பலியானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின உடல்களும் நாளை டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...