அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும்-ராகுல் ட்ராவிட்!

Date:

அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. இளம் வீரா்கள் சிறப்பாக ஆடியதால், வீரா்கள் தோ்வு தற்போது கடினமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். அணி நிா்வாகம் சாா்பில் கடின முடிவுகள் எடுக்கும் போது, வீரா்களுக்கு தெளிவாக விளக்கினால் பிரச்சினை இருக்காது. தொடா் முடிவு ஒரு தலைப்பட்சமாக இருந்தாலும், நாம் கடுமையாக உழைக் வேண்டி இருந்தது. முக்கிய வீரா்கள் இல்லாத நிலையிலும், இளம் வீரா்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.அதிகமான வாய்ப்புகளை பெறாத மயங்க், சிராஜ், ஷிரேயஸ், ஜெயந்த் ஆகியோா் இதில் பிரதானமானவர்கள் என்றாா்.

புதிய பயிற்சியாளா்கள் கீழேயும் ஒரே மனநிலையுடன் தான் ஆடி வருகிறோம். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் இலட்சியம். இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில்  நாம் பெற்ற வெற்றிகள் பெரிய அனுபவத்தை தந்தன. கான்பூரைக் காட்டிலும், மும்பை மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் வீரா்கள் நெருக்கமான தருணங்களில் சிறப்பாக ஆட வேண்டும்.

எங்கள் அணியின் செயல்பாடு அதிருப்தி அளித்துள்ளது. 62 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அஜாஸ் சிறப்பாக செயல்பட்டாா். 10 விக்கெட்டுகள் வீழ்த்திய 3 ஆவது வீரா் என்பது பெருமையாக உள்ளது என்றாா்.நியூஸிலாந்துடன் தொடரை வென்றதின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது .

கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தது. 121 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய வெற்றி மூலம் 124 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...