முதல் தடவையாக அமெரிக்காவில் அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்தில் கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.குறித்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை கடந்த 29ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தியவர் என தெரிய வருகின்றது.இதேவேளை, தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு, தற்போது 28ற்கும் அதிகமான நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் இதுவரை 366 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.