ஆஸ்திரியாவின் புதிய பிரதமர் பதவியேற்ற இரண்டு மாதங்களில் இராஜினாமா!

Date:

ஊழல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து, ஆஸ்திரியாவின் புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை நேற்று (02) வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் மாதம் புதிய அதிபராக அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்றாா். தற்போது, இவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அவர் கருத்து தெரிவிக்கும் போது,

ஆஸ்திரியாவில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் தலைவா் மற்றும் கட்சியின் தலைவா் ஆகிய இரண்டு பதவிகளும் விரைவில் ஒரு கைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

ஆஸ்திரியா மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ், தனது குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையில் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, நாட்டின் உள்நாட்டு அமைச்சராக இருக்கும் காா்ல் நெஹாமா், ஆஸ்திரியா மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமா் பொறுப்பையும் ஏற்க வாய்ப்புள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...