இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்பஜன் சிங் 1998 லிருந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
2011 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 விக்கெட்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.
இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் , ஒருநாள் , இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.இவர் பஞ்சாப் மாநிலத் அணியின் தலைவராக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். தற்போது இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.