இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு!

Date:

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹர்பஜன் சிங் 1998 லிருந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் டெஸ்ட் போட்டிகளில்  பந்து வீச்சில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

2011 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 விக்கெட்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.

இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் , ஒருநாள் , இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.இவர் பஞ்சாப் மாநிலத் அணியின் தலைவராக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். தற்போது இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...