இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய முடியாது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் ஏற்கனவே தனிநபர்களின் தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அடையாளச் சான்றுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யத் முடியாதுள்ள நிலையில், தனிப்பட்ட படம் அல்லது வீடியோவைப் பகிர குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டால், அவற்றை அகற்றப் போவதாக ட்விட்டர் நிறுவனம் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது..