ஈரான் அணு ஆயுதங்களைக் குவிப்பதை தடுத்து நிறுத்துவோம் என அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதைத் தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அது பலனளிக்காவில்லை என்றால் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.எந்த வித சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும் படி தமது அதிகாரிகளுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.