“ஈழத்து நூன்” எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டு தாவாரம்’ கவிதை நூல் அறிமுக விழா இன்று மாலை கொழும்பில்!

Date:

பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், “ஈழத்து நூன்” எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டு தாவாரம்’ கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு – 2, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி கலாபூஷணம் புர்கான் பீ. இப்திகார் (எம்.ஏ.) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் “முனீருள் மில்லத்” பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் கலந்து கொள்வதோடு, நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மல்லியப்பூ சந்தி திலகர், கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.ஆஸிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் பெற்றுக் கொள்வதோடு,  டாக்டர் மௌலவி ஜலீல் சுல்தான் (மன்பஈ) திருச்சி மாவட்ட அரசு டவுன், டாக்டர் வி.எஸ்.ஏ. ஷேக் முகமது சுஹைல் (தலைவர், செயலாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – திருச்சி), திருச்சி டாக்டர் எம்.கே. ஷாஹுல்ஹமீது (ஊடகவியலாளர் –  மணிச்சுடர், மக்கள்குரல்) எழுத்தாளர்களான கே.ஜே.உமர்கயான், பழனி சஹான் ஆகியோர் அழைப்பதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...