ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காலித் ஏத் அலோதைபி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 26 பேரில் இவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2018 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.