கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ளது என்.எம்.பெரேரா மன்றத்தில் இன்று (20)திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் வன.காலநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், கலாநிதி சிவசிரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் ஏனைய சர்வமதத் தலைவர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.