சூடானில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பொது மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்!

Date:

சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ராணுவம் துளியும் ஈடுபடாது என்றும் அதுவரை ஆட்சியை ராணுவம் தான் வழிநடத்துமென ராணுவத் தளபதி அல் புர்கான் தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து தற்போதே தங்களுக்கு ஜனநாயக ஆட்சி வேண்டுமென என தலைநகர் கார்தோம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணியாக சென்றனர். அமைதியாக பேரணி செல்ல போடப்பட்ட உத்தரவை மீறியதாக தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி பொது மக்களை ராணுவத்தினர் கலைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

லிட்ரோ கேஸ் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro)...

சவூதி நிதியுதவியுடன் இரத்தினபுரியில் உருவானது பிரம்மாண்ட மருத்துவ பீடம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைக்கிறார்!

இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சவூதி அரேபியாவின்...

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...