ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பராக் அகர்வால் நியமனம்!

Date:

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஐ.ஐ.டியில் படித்த அகர்வால், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 2011ல் ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அவருக்கு, தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், பராக் அகர்வால் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்துள்ள டோர்சி, அகர்வாலை ட்விட்டர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்திருப்பது சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார். அந் நிறுவனத்தை விட்டு டோர்சி வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.tribuneindia.com/news/business/indian-origin-executive-parag-agrawal-is-new-ceo-of-twitter-after-jack-dorsey-steps-down-344284&ved=2ahukewicql703cd0ahvzugwghrstb3sqfnoecgiqaq&usg=aovvaw074mi7mtf_0klf47ugqx34&ampcf=

Popular

More like this
Related

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...