துருக்கியில் மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி; இதுவரை 4 பேர் பலி!

Date:

துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்ததாகவும் மணிக்கூண்டு அருகே யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. புயலில் வணிக வளாகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 4 பேர் பலியானார்கள்.

அதேசமயம் மற்றொரு இடத்தில் சாலையோரம் இருந்த தகரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான சூறாவளியால் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய கடற்பகுதி மற்றும் கருங்கடல் பகுதியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி இணைப்பு

https://www.instagram.com/reel/CW5TL4Spc_p/?utm_medium=copy_link

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...