நத்தார் தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் தூதுவர்களுக்கு இடையே விசேட சந்திப்பு

Date:

இந்நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு நேற்று (12) இரவு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் தற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திர சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பவித்ராதேவி வன்னிஆராச்சி, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...