பாகிஸ்தானின் தொழிற்சாலை முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி குண்டர்கள் குழுவினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளியாக 11 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவரது மரணத்தின் பின்னனர் பாதிக்கப்பட்ட அவரது மனைவி, பிள்ளைகளின் நலன் கருதி மனிதாபிமான அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணியாளர் நலன்புரி நிதி 2.5 மில்லியன் மானியமாக வழங்க வேண்டும், என தொழிலாளர் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது அனுமதி வழங்கியுள்ளது.