பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி அறிமுகம்!

Date:

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து குறித்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.

குறித்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...