போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

Date:

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் இடம்பெறவுள்ளது.இதேவேளை இந்த விமான சேவையின் மூலம் மேற்கு ஐரோப்பா ஸ்கன்டிநேவியா நாடுகள், போல்டிக் நாடுகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய விமான பயணிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும். அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம்...

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...