மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்றைய தினம் (13) கராச்சியில் இடம்பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் கைதர் அலி 68 (39) , முஹம்மத் ரிஸ்வான் 78(52) ,நவாஸ் 30(10) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரெமேரியா ஷெஃபர்ட் 2(43), அகெல் குசைன், தோமஸ், ட்ரேக்ஸ், ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
201 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாது 19 ஓவர்கள் முடிவில் 137 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் ஷெய் கொப் மாத்திரம் அதிகபட்சமாக 31 ( 26) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.ஏனைய வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இளம் வீரர் வஸீம் ஜார் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் , சதாப் கான் 3 ( 17) விக்கெட்டுக்களையும் , ஷஹீன் அப்ரிடி , நவாஸ், ரொவ்ப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக ஆடிய கைதர் அலி தெரிவானார்.இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஆட்டம் இன்று (14) மாலை 6.30 ஆரம்பமாகவுள்ளது.