ஒமிக்ரோன் வைரஸின் ஆயுட்காலம் ;ஆய்வில் தகவல்!

Date:

கொவிட் வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஜப்பானிலுள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ் ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொவிட் பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல்தன்மையின் வேறுபாடுகளை இவர்கள் ஆராய்ந்து உள்ளனர்.

இதில் ஒமிக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என தெரியவந்துள்ளது. கவலைக்குரிய மாறுபாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ள உருமாறிய கொவிட் வைரஸ்கள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை தொடர்பு பரிமாற்றத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் அவற்றின் பரவலுக்கு பங்கு அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, ஆல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும், ஒமிக்ரோன் 191.3 மணி நேரம் வாழும். ஒமிக்ரோன் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிர் வாழ்கிறபோது, ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட பிரகாரம், தற்போதைய தொற்று கட்டுப்பாடு (அடிக்கடி கை கழுவுதல்) நடைமுறைகளுக்கு, கிருமிநாசினிகளை (HAND SANITIZER) பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...