சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் அரிசி!

Date:

சதொச விற்பனை நிலையங்களில் 1 கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்த போது அமைச்சர் வியாபாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். சம்பா அரிசி, நாட்டரிசி, பச்சையரிசி ஆகியவற்றை முறையே 100, 105, 115 ஆகிய விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என வியாபாரிகள் இதன் போது தெரிவித்துள்ளனர்.

விரைவில் இந்த அரிசி தொகையை சதொஸ விற்பனை நிலையங்களுக்கு வழங்கி, நுகர்வோர் ஒருவருக்கு 128 ரூபா என்ற அடிப்படையில், பத்து கிலோவை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.ஏனைய அரிசி வகைகளை 130 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...