சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது!

Date:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்படுகிறது.வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் 6,500 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகின்றது.

ஏற்கனவே டொலர் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்பட்டது. இந் நிலையில் இன்று (03) முதல் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த மாத இறுதியில் மீள திறக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .இந்த மாத இறுதியில் ஒரு தொகுதி மசகு எண்ணெய் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...