சவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞர் ஷைக். ஷாலிஹ் அல்-லுஹைதான் மறைவு!

Date:

ரியாத் – சவூதி அரேபியாவின் மூத்த, மற்றும் மதிப்புமிக்க மார்க்க அறிஞரான கலாநிதி ஷைக் ஷாலிஹ் அல்-லுஹைதான் நேற்று புதன்கிழமை (05) காலமானார்.

நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவரது மரணச் செய்தியை நேற்று புதன்கிழமை அதிகாலை குடும்பத்தினர் ட்விட்டரில் உறுதிப்படுத்தினர்.

90 வயதான ஷைக் அல்-லுஹைதான் அல்-கசீம் பிராந்தியத்திலுள்ள புகைரியா நகரில் பிறந்தார்.மேலும் முஸ்லீம் உலக லீக்கின் உறுப்பினர், மூத்த அறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர் உட்பட பல பதவிகளை வகித்தார். மற்றும் உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

ட்விட்டரில், அவரது பெயர் ஹேஷ்டேக் செய்யப் பட்டு, அவருக்கான பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் குவிந்தன.

கலாநிதி. அல்-லுஹைதான் மக்காவின் பெரிய பள்ளிவாசலிருந்து பிரசங்கங்களையும் வழங்கி வந்ததோடு ஒரு இஸ்லாமிய பத்திரிகையின் வெளியீட்டாளராகவும் இருந்தார். மறைந்த அறிஞரின் ஜனாஸா ரியாத்திலுள்ள அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் பல்லாயிரம் பேர் முன்னிலையில் தொழுகை நடத்தப் பட்டு,நல்லடக்கம் செய்யப்பட்டது.அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...