நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட “யாசஸ்ஸி பியச” கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு!

Date:

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றவர்கள் மீது விரல் நீட்டி தவறுகளை மற்றவர்கள் மீது சுமத்தி தான் நல்லவர் என காண்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த நாட்டை அதள பாதாளத்தை நோக்கி தள்ளியதன் பொறுப்பை தனி நபர்களன்றி முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இவர்கள் அனைவரும் நாட்டுக்கு இழைத்தது கூட்டு அழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், போலியானவர்களை வெற்றி பெற செய்ததன் விளைவை முழு நாடும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மானின் 4.4 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் “யசஸ்ஸி பியஸ” கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க,கெத்தாராம விகாரையின் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரரின் உன்னத எண்ணக்கருவின் பிரகாரமும் பூரண பங்களிப்பின் பேரிலும் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1935 ஆம் நிர்மானக்கப்பட்ட குறித்த விகாரையின் அபிவிருத்திப் பனிகள் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டதோடு,நீண்ட காலங்களுக்குப் பிறகு எத்தகைய கவனிப்புகளும் அற்று இருந்து குறித்த விகாரகையின் அபிவிருத்திப் பனிகளுக்கு கௌரவ பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் அவர்களின் அதிக நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமையை தலைமை தேரர் சங்கைக்குரிய வெலடகொட யசஸ்ஸி தேரர் பெரிதும் பாராட்டியதோடு,இன ஒற்றுமைக்கான தேவையையும் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...