நாட்டில் தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Date:

நாட்டில் தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) இடம்பெற்றது.இக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது, தொடர்ந்து விநியோகத்தை மேற்கொள்வதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது.முடியுமான அளவு மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.எவ்வாறு தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்வது என்பது தொடர்பில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் ஆராயப்பட்டது.தடையின்றி தேவையான எண்ணெய்யை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையிடம் இருந்து பாரிய தொகை கனியவள கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்.வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்த தொகையைச் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...