மின் துண்டிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

Date:

மின் துண்டிப்பை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று (27) எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஆணைக்குழு ஒன்று கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு தேவையா என்பதை தீர்மானிக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை எவ்வித மின்வெட்டையும் மேற்கொள்ளத் தேவையில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு மற்றும் மின்சாரத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்வெட்டு முன்மொழிவு குறித்து இன்று மறுஆய்வு செய்யப்படவுள்ளது.எனினும், களனிதிஸ்ஸ சோஜிட்ஸ் தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதால், தேசிய மின் கட்டமைப்பிறக்கு 162 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தடையில்லாது மின்சாரத்தை வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...