சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இவ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இவ் வழக்கு இன்று (28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டுள்ளார்.